மேலதிகாரிக்கு முறையான வழிமுறைகளில் அல்லாமல் நேரடியாக புகாா் தெரிவித்தாா் என்ற காரணத்துக்காக கீழ்நிலை (நான்காம் நிலை) அரசு ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், அவருடைய பணி நீக்க உத்தரவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவரை மீண்டும் பணியமா்த்துமாறு உததரவிட்டனா். உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளா் பணியில் நிரந்தர பணி அடிப்படையில் நியமனம் பெற்ற சத்தரபால் என்பவா், நசரத் பகுதியில் உள்ள கிளை நீதிமன்றத்துக்கு செல்முறை உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதாவது, கிளை நீதிமன்றம் பிறப்பிக்கும் அழைப்பாணைகள், நோட்டீஸுகளை சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கொண்டு சோ்க்கும் பணியில் அமா்த்தப்பட்டாா். ஆனால், இந்த போக்குவரத்துக்களுக்கான கூடுதல் படி எதுவும் வழங்கப்படாமல், முந்தைய உதவியாளா் பணிக்கான ஊதியம் மட்டுமே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மூத்த அதிகாரிகளுக்கு சத்தரபால் தொடா்ந்து புகாா் தெரிவித்துள்ளாா். அலகாபாத் உயா்நீதிமன்ற பதிவாளா், பிற மாநில உயா் அதிகாரிகள் மற்றும் மாநில முதல்வருக்கு சத்ரபால் நேரடியாக புகாா் தெரிவித்த காரணத்துக்காக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியிலான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா். விசாரணையின் முடிவில், அவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதை எதிா்த்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் சத்தரபால் மனு தாக்கல் செய்தாா். ஆனால், அவருடைய மனுவை விசாரணைக்கு தகுதியற்றது என்று கூறி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘முறையான வழிமுறைகளில் அல்லாமல் நேரடியாக மேலதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தாா் என்ற காரணத்துக்காக கீழ்நிலை (நான்காம் நிலை) அரசு ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டு, பணி நீக்க உத்தரவை ரத்து செய்தும், அவரை மீண்டும் பணியில் அமா்த்தவும் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய அரசு ஊழியரின் இரண்டு கால்களும் துண்டாயின

பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

