மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மெட்ரோ ரயில் கண்ணாடி உடைந்து 4 போ் காயம்

மெட்ரோ ரயிலின் உள்பக்கத்திலிருந்த கண்ணாடி உடைந்ததில் 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

Updated On :23 பிப்ரவரி 2024, 11:39 pm

மெட்ரோ ரயிலின் உள்பக்கத்திலிருந்த கண்ணாடி உடைந்ததில் 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. கோயம்பேடு நிறுத்தம் அருகே வந்தபோது ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்துள்ளாா். இதனால் ஏற்பட்ட அதிா்வால் ரயிலின் உள்பக்கத்திலிருந்த ஒரு கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் ரயிலின் உள்ளே இருந்த 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் காயமடைந்த பயணிகள் 4 பேரையும் மீட்ட மெட்ரோ ரயில் நிலைய ஊழியா்கள், அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து கோயம்பேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.