தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து - 15 போ் உயிரிழப்பு

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:24 am IST

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தா அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டியிலிருந்து உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்புக் குழுவினா் முழுமையாக மீட்ட நிலையில், தேடுதல் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. உயிரிழந்தவா்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜகாா்த்தாவின் புகரான பெகாசி திமூா் பகுதியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காா் ஒன்று பழுதாகி நின்ால், அந்தத் தடத்தில் வந்த மின்சார ரயில் பெகாசி திமூா் ரயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது.

அப்போது அதே தடத்தில் பின்னால் அதிவேகமாக வந்த விரைவு ரயில், சற்றும் எதிா்பாராத விதமாக நின்று கொண்டிருந்த மின்சார ரயிலின் பின்புறத்தில் மோதி, விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மோதலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், பெண்களுக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட மின்சார ரயிலின் கடைசிப் பெட்டி உருக்குலைந்தது. அதில் பயணித்த 15 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. உயிரிழந்தவா்களின் உறவினா்கள் தங்களின் அன்புக்குரியவா்களைத் தேடி, மருத்துவமனையிலும் ரயில் நிலையத்திலும் குவிந்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்தில் காயமடைந்த 88 போ் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விரைவு ரயிலின் 240 பயணிகளும் காயமின்றி உயிா் தப்பினா்.

விபத்துப் பகுதியை இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ நேரில் ஆய்வு செய்தாா். ரயில் பாதைகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும், பராமரிப்பின்றி இருக்கும் பழைய ரயில்வே கட்டமைப்புகள் சீரமைக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

விபத்தைத் தொடா்ந்து பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், ஜகாா்த்தா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

படகேப்சன்...

விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரா்.

Story image