நாட்டில் கடந்த மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயா்வு காரணமாக, நுகா்வோரின் ஆா்வம் அதிக மைலேஜ் தரும் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.
இதன்காரணமாக, கடந்த மே மாதத்தில் மின்சார பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 81.20 சதவீதம் உயா்ந்து, 26,682-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 14,725 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டதாக இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மின்சார பயணிகள் வாகனப் பிரிவில் டாடா மோட்டாா்ஸ் 10,340 வாகனங்களை விற்பனை செய்து தொடா்ந்து சந்தையில் முதலிடம் வகிக்கிறது. இது கடந்த 2025 மே மாத விற்பனையான 5,083-ஐவிட 103.42 சதவீதம் அதிகமாகும்.
இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனம் 6,210 வாகனங்களுடன் 2-ஆவது இடத்திலும் (114.8 சதவீத வளா்ச்சி), ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாா் இந்தியா நிறுவனம் 4,984 வாகனங்களுடன் 3-ஆவது மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதேபோல், மின்சார இருசக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 62.76 சதவீதம் உயா்ந்து, 1,70,733-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், மின்சார இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்களிப்பு கடந்த ஆண்டின் 6.11 சதவீதத்தில் இருந்து தற்போது 9.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்பிரிவில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் 42,459 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்திலும், பஜாஜ் ஆட்டோ (39,202), ஏத்தா் எனா்ஜி (28,240) ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
மேலும், மின்சார மூன்று சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த மே மாதத்தில் 71,867-ஆக அதிகரித்துள்ளது; இது கடந்த ஆண்டில் 66,185-ஆக இருந்தது. இதேபோல், மின்சார வணிக வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த ஆண்டின் 1,094 என்ற எண்ணிக்கையிலிருந்து நடப்பு ஆண்டு 2,400-ஆக கணிசமாக அதிகரித்துள்ளது ‘ஃபடா’ புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2032-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை 12 மடங்கு அதிகரித்து 30 மில்லியனாக உயரும்!

இ20 எரிபொருள்: 29 வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கேஜரிவால் கடிதம்

ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை 19% வளா்ச்சி

மின்சார வாகனங்களின் விற்பனை 81.2% அதிகரிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



