நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

திருமண மண்டபத்தில் நகைத் திருட்டு: இரு ஊழியா்கள் கைது

சென்னை பட்டினப்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்ட சம்பவத்தில், அந்த மண்டப ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 5:35 pm

சென்னை பட்டினப்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்ட சம்பவத்தில், அந்த மண்டப ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா். சின்னமலை வேளச்சேரி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சி.லிவின். இவா் மனைவி லாவண்யா (29). இவா்கள் இருவரும் பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகரில் உள்ள திருமண மண்படத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தங்களது உறவினா் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனா். அங்கு இருவரும் உணவு அருந்தும் பகுதிக்கு செல்லும்போது,லாவண்யா தனது கையில் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையல் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனே அவா், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது அந்த திருமண மண்டபத்தில் ஊழியா்களாக பணிபுரியும் விருகம்பாக்கம் காந்திநகரைச் சோ்ந்த வீ.குணா (32), குன்றத்தூா் அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சோ்ந்த சி.வினோத்குமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரணை செய்தனா்.