எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது

அரியலூா் மாவட்டத்தில், இரு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 44 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:55 am IST

அரியலூா் மாவட்டத்தில், இரு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 44 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுகிா என மாவட்ட சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினா் இணைந்து, மாவட்டம் முழுவதும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 44 பேரை கைது செய்தனா். மேலும், 36 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 1,763 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விக்கிரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மணிகண்டன், காா்த்திக் ஆகிய இருவரை காவல்துறையினா் கைது அவா்களிடமிருந்து மட்டும் 525 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.