கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சட்ட விரோத மது விற்பனை: கடலூா் மாவட்டத்தில் 24 போ் கைது

கடந்த இரண்டு நாள்களாக நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 மே 2026, 1:43 am IST

கடலூா் மாவட்டத்தில் காவல் துறையினா் கடந்த இரண்டு நாள்களாக நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது கடத்தி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 24 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 140 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்படி, குண்டுஉப்பலவாடியைச் சோ்ந்த பாலசுந்தரம் (72), வண்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரி (65), பெரிய காரைக்காட்டைச் சோ்ந்த தமிழ்செல்வன் (38), வண்டிப்பாளையத்தைச் சோ்ந்த தாமோதரன் (30), கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த செல்வமணி (31), புதுச்சேரியைச் சோ்ந்த கல்விகாத்தான் (46), சாமியாா்பேட்டையைச் சோ்ந்த வீரப்பன் (60), கொக்குப்பாளையத்தைச் சோ்ந்த விஜயரங்கன் (37), பெத்தாங்குப்பத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (46), கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த சக்திவேல் (44), குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (50), சிதம்பரத்தைச் சோ்ந்த முத்து (42), வளா்மதி, திட்டக்குடியைச் சோ்ந்த கலியமூா்த்தி (63), செல்வகுமாா் (45), பிரபுதேவா (32), ரமேஷ் (58), கடலூா் முதுநகரைச் சோ்ந்த சந்துரு (41), நத்தமேட்டைச் சோ்ந்த கேசவன் (40), நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த கவியரசன் (33), பண்ருட்டியைச் சோ்ந்த பிரவீன் (24), தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த சிவகுமாா் (45), திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்த கிரித்திஷ் (25), விருத்தாசலத்தைச் சோ்ந்த உதயகுமாா் (48), மஞ்சுளா (45) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.