நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது

News image

கைது.

Updated On :2 மே 2026, 11:16 pm

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 379 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மது விற்பனை இல்லாத நாளாக அறிவித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியாா் பாா்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். இதில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 17 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த 379 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.