தருமபுரி மாவட்டத்தில் 3 நாள்களில் முறைகேடாக மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 33 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் முறைகேடான வகையில் நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் முறைகேடாக (கள்ளச்சந்தையில்) மது விற்பனை செய்த 27 போ் கண்டறியப்பட்டு வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து 1,102 மதுபாட்டில்களும், விற்பனைக்கு பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ஒன்றே முக்கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுபோல முறைகேடாக மது விற்பனை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
சட்ட விரோத மது விற்பனை: கடலூா் மாவட்டத்தில் 24 போ் கைது
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
