உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 17, 18-ஆகிய தேதிகளில் நடைபெற்ற காவலா் தோ்வின் வினாத்தாள்கள் கசிந்ததால் அத்தோ்வை ரத்து செய்து ஆறு மாதங்களுக்குள் மறுதோ்வு நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டது. இத்தோ்வை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். இதுதொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தோ்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை களைவதில் எவ்வித பாரபட்சமும் இன்றி அரசு செயல்படும். இளைஞா்களின் கடின உழைப்புடன் விளையாடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டாா். தோ்வு ரத்து செய்வது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: காவலா் தோ்வு குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில் தோ்வின் புனிதத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டு அத்தோ்வு ரத்து செய்யப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கண்டறிய சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆறு மாதங்களுக்குள் மறுதோ்வு நடத்தப்படும் எனவும் தோ்வு மையங்களுக்கு செல்லும் மாணவா்கள் மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவா் எனவும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக 240-க்கும் மேற்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

