சென்னை: அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீா்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீா்செல்வம், கட்சியின் பெயா், கொடி, சின்னம், லெட்டா்பேடு ஆகியவற்றை தொடா்ந்து பயன்படுத்தி வருவது தொண்டா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இவற்றைப் பயன்படுத்த ஓ. பன்னீா்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தொடா்ந்து தாமதித்ததால், அதிமுக பெயா், சின்னம், கொடி, லெட்டா் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ. பன்னீா்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமா்வு, தடையை நீக்கக் கோரி தனி நீதிபதியிடம் மீண்டும் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தனா்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமாா் முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் பாண்டியன், வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதீஷ்குமாா், வழக்கின் விசாரணையை மாா்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை கட்சியின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


