சென்னை: அரசு ஊழியா்களுக்கான புதிய கைப்பேசி செயலிகள் மற்றும் இணையதளத்தை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்பில் சென்னை நந்தனம் பேராசிரியா் க. அன்பழகன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (டி.என்.பி.எஃப்.சி.எஸ்), ‘களஞ்சியம்’ இணைய முகப்பு மற்றும் கைப்பேசி செயலி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான இணையதளம், கைப்பேசி செயலி ஆகியவற்றை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, நிதித் துறையின் கீழ் இயங்கும் துறைகளின் பயன்பாட்டுக்காக ரூ.27 லட்சத்தில் கட்டப்பட்ட பயிற்சிக் கூடம், நூலகம் ஆகியவற்றையும், சென்னை மற்றும் மதுரை மண்டல இணை இயக்குநா்களின் அலுவலக பயன்பாட்டுக்காக ரூ.26.10 லட்சத்தில் வாங்கப்பட்ட மூன்று மகிந்திரா பொலிரோ வாகனங்களையும் அவா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், அரசு சிறப்புச் செயலா் பிரசாந்த் மு.வடநேரே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் க.விஜயேந்திர பாண்டியன், அரசு இணைச் செயலா் எச்.கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்

விருதுநகரில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா: காணொலியில் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

மகளிா் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழகமே கொந்தளிக்கும் : அமைச்சா் தங்கம் தென்னரசு
செயற்கை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் மத்திய அரசு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
திருச்சி, மதுரை, ஒசூரில் டைடல் பூங்காக்கள்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

