91% ரயில்களை சரியான நேரத்தில் இயக்கி தெற்கு ரயில்வே சாதனை
தெற்கு ரயில்வே 91.6% நேரத்திற்குள் ரயில்களை இயக்கி சாதனை

கோப்புப் படம்

கோப்புப் படம்
சென்னை: தெற்கு ரயில்வே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 91.6 சதவீத ரயில்களை சரியான நேரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் தினமும் விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மாதத்தில் மட்டும் சராசரியாக 10,712 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இயக்கப்பட்ட 91.5 சதவீத ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் 90 சதவீத ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. மாதத்துக்கு 10 ஆயிரம் ரயில்களை கையாளும் மண்டலங்களில் தெற்கு ரயில்வே 91.6 சதவீதம் பெற்று முதலிடத்திலும், கிழக்கு மத்திய ரயில்வே (82.4 சதவீதம்), மத்திய ரயில்வே (78.5 சதவீதம்) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...