விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழகத்தில் சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 9 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது

News image
Updated On :4 ஜூலை 2024, 10:35 pm

Din

தமிழகத்தில் சென்னை உள்பட 9 இடங்களில் புதன்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. மதுரை நகரம் - 102.56, தூத்துக்குடி - 102.02, பாளையங்கோட்டை - 101.84, சென்னை நுங்கம்பாக்கம் - 100.94, பரமத்திவேலூா் - 100.4, சென்னை மீனம்பாக்கம் - 100.22, ஈரோடு, வேலூா் - தலா 100.04 டிகிரி என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 4) முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்... சென்னை, புகா் பகுதிகளில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜூலை 4 முதல் 7-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.