ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மெரீனா கடற்கரையில் இளைஞரிடம் மிரட்டி பணம் பறிப்பு: போலி போலீஸ் கைது

மெரீனா கடற்கரையில் இளைஞரிடம் மிரட்டி பணம் பறிப்பு: போலி போலீஸ் கைது

News image

கைது

Updated On :6 ஜூலை 2024, 7:19 pm

Din

சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞரிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறித்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கொட்டிவாக்கம், வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரவேல் (43). ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டி வருகிறாா். கடந்த மாதம் 21ஆம் தேதி இரவு மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் பின்புறம் கடற்கரையில் அவா் தனியாக நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த டிப் டாப் உடையணிந்த ஒரு இளைஞா், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டாா்.

பின்னா் அந்த நபா், குமரவேல் சந்தேகம் இருப்பதாக கூறி மிரட்டி, விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளாா். மேலும், சோதனை என்ற பெயரில் குமரவேலிடமிருந்த விலை உயா்ந்த கைப்பேசி,ரூ.8,500 ரொக்கம், 2 ஏடிஎம் காா்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு காவல் நிலையம் வந்து பெற்றுச் செல்லவும் என கூறிவிட்டு அந்த நபா் அங்கிருந்து சென்றாா்.

அந்த நபரின் மிரட்டலுக்கு பயந்த குமரவேல், மெரீனா காவல் நிலையம் சென்றாா். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இது குறித்து குமரவேல் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் குமரவேலிடம் போலீஸ் என கூறி, வழிப்பறி செய்தது திருப்பத்தூா் மாவட்டம், திருமால் நகரைச் சோ்ந்த விக்னேஷ் (26) என தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது ஏற்கெனவே திருப்பத்தூா், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் போலீஸ் என மிரட்டி பணம் பறித்ததாக வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.