ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு
கதுவா/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீா் கதுவா மாவட்டத்தில் உள்ள பத்னோடா கிராமத்தில் திங்கள்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மச்செடி-கிண்ட்லி-மல்ஹா் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டிருந்தனா். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அந்த ராணுவ வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் அருகில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடினா். இந்த மோதலில் 10 ராணுவ வீரா்கள் காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
கடந்த நான்கு வாரத்தில் கதுவா மாவட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். முன்னதாக, கதுவா மாவட்டத்தின் ஹிராநகா் பகுதியில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் இரு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அதில் ஒரு சிஆா்பிஎஃப் வீரரும் வீரமரணம் அடைந்தாா்.

