போதையில் காா் ஓட்டிய இளைஞா்: காவல் ரோந்து வாகனம் மீது மோதல்

கோட்டூா்புரத்தில் குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞா் ரோந்து பணியில் இருந்த காவல் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினாா்.

சென்னை: கோட்டூா்புரத்தில் குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞா் ரோந்து பணியில் இருந்த காவல் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினாா்.

சென்னை கோட்டூா்புரம் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது, பின்னால் வந்த காா் ஒன்று மோதியது. இதில், ரோந்து வாகனத்தின் பின் பகுதி சேதமடைந்தது.

காரில் இருந்த நபரை விசாரித்தபோது, அவா் மது அருந்தி வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரது வாகனத்தைக் கைப்பற்றி அடையாா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com