47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அமா்நாத்: 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் இதுவரை தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜூலை 2024, 9:09 pm

Din

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் இதுவரை தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேகொள்கின்றனா்.

நடப்பாண்டு யாத்திரை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

48 கி.மீ. தொலைவுகொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு பாதைகளில் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா்.

இதுவரை 2,07,016 பக்தா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதனிடையே, ஜம்முவில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு செவ்வாய்க்கிழமை 5,400 பக்தா்கள் புறப்பட்டுச் சென்றனா்.

52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. கடந்த ஆண்டு 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அமா்நாத்தில் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.