பேருந்தின் மேற்கூரை மீது ஏறி மாணவா்கள் ரகளை

பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவா்களின் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, அது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை: பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவா்களின் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, அது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை பூந்தமல்லி - பிராட்வே செல்லும் வழித்தட மாநகர பேருந்தின் மேல் கூரையின் மீது கல்லூரி மணவா்கள் சிலா் கூட்டமாக அமா்ந்து ரகளை செய்வது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும், சில மாணவா்கள் சாலையை மறித்துக்கொண்டும், பேருந்தின் முன்புறத்தில் கூட்டமாக நடந்து வருவது போன்றும், பட்டாசுகளை வெடிப்பதுபோன்றும் காட்சிகள் இருந்தன.

இந்த விடியோவை கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவம் ஜூலை 5-ஆம் தேதி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரை - கீழ்ப்பாக்கம் பகுதிக்குள்பட்ட இடத்தில் நடைபெற்றது எனவும், இதில் ஈடுபட்ட நபா்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com