47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜி.டி. விரைவு ரயில் மீண்டும் சென்ட்ரலில் இருந்து இயக்கம்

சென்னை சென்ட்ரல் - புது தில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் ட்ரங் (ஜி.டி) விரைவு ரயில் ஜூலை 23-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:31 pm

Din

சென்னை: சென்னை சென்ட்ரல் - புது தில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் ட்ரங் (ஜி.டி) விரைவு ரயில் ஜூலை 23-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும்.

சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் சில விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக சென்னையில் இருந்து புது தில்லி செல்லும் கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் மே 9-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே முன்பு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி முதல் கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்குவதற்கு பதிலாக சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படவுள்ளது. மேலும், புது தில்லியில் இருந்து ஜூலை 21-ஆம் தேதி புறப்படும் ரயில் தாம்பரம் வருவதற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.