47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசு ஆலை விபத்தை தடுக்க புதிய கொள்கை: எடப்பாடி வலியுறுத்தல்

பட்டாசு ஆலை விபத்தை தடுக்க புதிய கொள்கை அவசியம்: எடப்பாடி வலியுறுத்தல்

News image
எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :9 ஜூலை 2024, 8:47 pm

Din

சென்னை: பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க புதிய கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்து உயிரிழப்பைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சிவகாசி அருகே காளையாா்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் நேரும் விபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும்.

கே.அண்ணாமலை (பாஜக): பட்டாசு ஆலை வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவா்கள் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் நேரிடும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, அந்த ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசனும், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.