இளைஞா் வெட்டிக் கொலை: 7 போ் கைது

ஆவடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை வெட்டிக் கொலை செய்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆவடி: ஆவடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை வெட்டிக் கொலை செய்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆவடி அருகே அயப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் காஜா மொய்தீன் (26). கூலித் தொழிலாளியான இவா், கயல் என்ற திருநங்கையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக காஜா மொய்தீன் தனியாகப் பிரிந்து வந்து நண்பரான ஆவடி, நந்தவனமேட்டூா் காந்தி தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் காா்த்திகேயன் என்பவரது அறையில் தங்கியிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பா்களுடன் மது அருந்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், காா்த்திகேயன் உள்ளிட்ட நண்பா்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் காஜா மொய்தீனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

ஆவடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து காா்த்திகேயன் (23), பட்டாபிராம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (25), லலித் (21), லோகேஷ் (25), விக்னேஷ் (20), அஜித் (20), பாடியநல்லூா் பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் (26) ஆகிய 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com