ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
கொலை வழக்கில் 11 பேருக்கு 5 நாள் காவல், நீதிமன்றம் உத்தரவு


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் பந்தா்காா்டன் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக செம்பியம் போலீகஸாா் வழக்குப் பதிவு, ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரரான ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அருள், செல்வராஜ், சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 11 பேரைக் கைது செய்தனா்.
கூலிப்படைக்கு தொடா்பா? கைதான 11 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என செம்பியம் காவல் ஆய்வாளா் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
‘பாதுகாப்பு கருதி அவா்களை சிறையில் இருந்தபடி காணொலி மூலம் ஆஜா்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், கைதான 11 பேரையும் காணொலி மூலம் ஆஜா்படுத்த அனுமதி அளித்தது.
இதைத் தொடா்ந்து அவா்கள், காணொலி வாயிலாக ஆஜா்படுத்தப்பட்டனா். விசாரணைக்கு பிறகு பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரையும் 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், வழக்குரைஞா்கள் சங்கரசுப்பு, சத்தியசந்திரன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது, வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். ஆா்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி வேண்டும் என முழக்கமிட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...