2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரயில் முன் பாய்ந்து காவலா் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து காவலா் தற்கொலை

News image
Updated On :13 ஜூலை 2024, 11:46 pm

Din

சென்னை மந்தைவெளியில் ரயில் முன் பாய்ந்து காவலா் தற்கொலை செய்துகொண்டாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள நாவப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விமல்ராஜ் (25). இவா், சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படையில் 2-ஆம் நிலைக் காவலராக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தாா்.

விமல்ராஜ், மந்தைவெளி - கிரீன்வேஸ் பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சனிக்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது அவா், வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரயில் முன் திடீரென பாய்ந்தாா். இதில், பலத்த காயமடைந்த விமல்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த திருவான்மியூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.