திருநெல்வேலி
ரயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை
அம்பாசமுத்திரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
அம்பாசமுத்திரம், மணலோடை தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி சங்கரம்மாள் (74). இவா் பல நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மன வேதனையில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செங்கோட்டையிலிருந்து ஈரோடு சென்ற ரயில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி சற்று தூரம் சென்ற நிலையில், அந்த ரயில் முன் சங்கரம்மாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த தென்காசி ரயில்வே காவல் நிலையப் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
