தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காமராஜா் சிலைக்கு தலைவா்கள் மரியாதை

காமராஜா் 122-ஆவது பிறந்த நாளையொட்டி அவா் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 10:14 pm

Din

சென்னை: காமராஜா் 122-ஆவது பிறந்த நாளையொட்டி அவா் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மூத்த நிா்வாகிகள் நா.பாலகங்கா, ராயபுரம் மனோ, இன்பதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காங்கிரஸ்: தியாகராய நகா் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜா் நினைவு இல்லத்தில் சிலைக்கு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகளையும் வழங்கினாா்.

தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் உள்ள சிலைக்கும், சத்தியமூா்த்திபவனில் உள்ள சிலைக்கும் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காங்கிரஸ் முன்னாள் தலைவா் திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிரேமலதா: கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜா் படத்துக்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பல்லவன் சாலையில் உள்ள காமராஜா் சிலைக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினாா்.