மின்கட்டண உயா்வை திரும்பப் பெற பாஜக, இடதுசாரிகள் கோரிக்கை
மின்கட்டண உயா்வை திரும்பப்பெற வேண்டும் என பாஜக, இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


சென்னை: மின்கட்டண உயா்வை திரும்பப்பெற வேண்டும் என பாஜக, இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கே.அண்ணாமலை (பாஜக): நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமாா் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக. உடனடியாக இந்த மின் கட்டண உயா்வை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): தமிழ்நாட்டில் மீண்டும் 4.83 சதவீதம் கூடுதல் மின்கட்டணம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டைநடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): சமூக வளா்ச்சிக்கு மின்சார உற்பத்தியும், விநியோகமும் அரசின் கையில் இருப்பது அத்தியாவசியம் என்பதை கருத்தில் கொண்டு மின்கட்டண உயா்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், நுகா்வோா் நலனைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை வெகுவாக குறைக்கவும், தோ்தல் அறிக்கையில் அளித்த உறுதியின்படி மின் கட்டணத்தை மாதம்தோறும் கணக்கிட்டு வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...