மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நியாயவிலைக் கடைகளில் அந்நியா்களுக்கு இடமில்லை: உறுதிச் சான்று அளிக்க அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அந்நியா்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றை அளிக்க பணியாளா்களுக்கு தமிழக அசு உத்தரவிட்டுள்ளது.

News image
நியாயவிலைக் கடை
Updated On :16 ஜூலை 2024, 9:25 pm

Din

சென்னை: நியாயவிலைக் கடைகளில் அந்நியா்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றை அளிக்க பணியாளா்களுக்கு தமிழக அசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த சான்றிதழ் படிவம் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘நான் பணிபுரிந்து வரும் நியாயவிலைக் கடையில் வேலை நேரத்தில் அந்நியா்கள், தேவையற்ற வெளிநபா்கள் யாரும் பணிபுரியவில்லை என்று சான்று செய்கிறேன். உயரதிகாரிகள் ஆய்வின் போது வெளிநபா்கள் இருப்பது கண்டறியப்பட்டால் துறை எடுக்கும் எந்தவிதமான சட்டப்பூா்வ நடவடிக்கைக்கும் கட்டுப்படுவேன்’ என்று உறுதி அளிப்பதாக சான்றிதழில் கூறப்பட்டுள்ளது.

அதில், நியாய விலைக் கடை விற்பனையாளா் தனது பெயா், தேதியுடன் கூடிய கையொப்பம் இட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சான்றை நியாய விலைக் கடைகளை இயக்கி வரும் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியா் அல்லது செயலரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.