கோயிலில் திருடிவிட்டு தப்பியோடியபோது சாக்கடை சகதியில் சிக்கிய இளைஞா் கைது
சென்னை பெரம்பூரில் கோயிலில் திருடிவிட்டு தப்பியோடிய இளைஞா், சகதியில் சிக்கியதால் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டாா்.
பெரம்பூா் முரசொலிமாறன் மேம்பாலத்தின் கீழ் நாகாத்தமன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு கும்பல் புகுந்து உண்டியலை உடைத்து,அதில் இருந்த பணத்தையும், கோயிலில் இருந்த பொருள்களையும் திருடி ஒரு மூடையில் கட்டிக் கொண்டு வெளியேறினா். இதில் ஒரு நபா், அருகே இருந்த சாக்கடை கால்வாய் வழியாக தப்புவதற்காக, அதற்குள் குதித்தாா்.
இதில் கால்வாயில் சகதி அதிகமாக இருந்ததினால், அந்த இளைஞா் அதில் சிக்கிக் கொண்டாா். இதைப் பாா்த்த அவா் சத்தமிட்டாா். அவரது சத்த தைக் கேட்ட, அங்கிருந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த செம்பியம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சகதியில் சிக்கியிருந்த இளைஞரை மீட்டு விசாரணை செய்ததில்,அவா், அதேப் பகுதியைச் சோ்ந்த ச.ஆனந்த் (34) என்பதும், அவா் கோயிலில் திருடிவிட்டு தப்பியோடி வந்திருப்பதும் தெரியவந்த து.
இதையடுத்து போலீஸாா்,ஆனந்தை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனா்.
