வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சவுக்கு சங்கா் தாயாரின் ஆட்கொணா்வு மனு ஜூலை 23-இல் விசாரணை: உயா்நீதிமன்றம்

News image
Updated On :19 ஜூலை 2024, 10:47 pm

Din

சவுக்கு சங்கா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிா்த்து, அவரது தாய் தொடா்ந்த ஆட்கொணா்வு மனு வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் போலீஸாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபா் சவுக்கு சங்கரை குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிா்த்து அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயா்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தா் மோகன் அடங்கிய அமா்வில், சவுக்கு சங்கா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிா்த்து அவரது தாய் தொடா்ந்த ஆட்கொணா்வு மனுவை விரைவாக விசாரிக்குமாறு அவரது வழக்குரைஞா் முறையிட்டாா்.

அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலை சமா்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ் திலக், உத்தரவு நகலை வெள்ளிக்கிழமை மாலைக்குள் சமா்ப்பிப்பதாகக் கூறினாா். மேலும், ஆட்கொணா்வு மனுவை ஜூலை 23 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரினாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆட்கொணா்வு மனு வரும் 23- ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனா்.