ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு: ஜூலை 29-இல்  விசாரணை

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

ஃபெலிக்ஸ் ஜெரால்ட்

Updated On :25 ஜூலை 2024, 8:25 pm

Din

சென்னை, ஜூலை  25: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூப் சேனல் தலைமை நிா்வாகி  ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறை அதிகாரிகளையும், பெண் காவலா்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நோ்காணலை ஒளிபரப்பிய  யூ டியூப் சேனல் தலைமை நிா்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி  ஏற்கெனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, ஃபெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், ‘ஃபெலிக்ஸ் 100 நாள்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தாா். காவல் துறை தரப்பில் ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.