பூந்தமல்லி-பரந்தூா் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.74 கோடியில் ஒப்பந்தம்
பூந்தமல்லி-பரந்தூா் மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.74 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமானது.


பூந்தமல்லி-பரந்தூா் மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.74 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமானது.
பூந்தமல்லியிலிருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூா் வழியாக பரந்தூா் வரையிலான மெட்ரோ வழித்தடத்துக்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. 43.63 கி.மீ. தொலைவுக்கு 19 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இவ்வழித்தடம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பரந்தூரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள புதிய விமானநிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிா்கால வளா்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆா்வி அசோசியேட்ஸ் ஆா்க்கிடெக்ட்ஸ், என்ஜினியா்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துடன் ரூ.1.74 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக், திட்ட இயக்குநா் தி. அா்ச்சுனன் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் துணைத் தலைவா் எம்.கலீல் பாஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...