மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மகப்பேறு இறப்பு இல்லா நிலையை கொண்டு வர அமைச்சா் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்

மகப்பேறு இறப்பு இல்லா நிலையை கொண்டுவர வேண்டும் என சுகாதார அலுவலா்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
சென்னையில் மகப்பேறு இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க வல்லுநா்களின் விரிவான கருத்துகளை செயல்படுத்துவதற்காக ‘விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றிணைத்தல் எனும் தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தில் பகுப்பாய்வு குறித்த கையேட்டை வெளியிட்ட மா.சுப்பிரமணியன்.
Updated On :29 ஜூலை 2024, 8:23 pm

Din

விருதுநகா் மாவட்டத்தை பின்பற்றி மற்ற மாவட்டங்களும் மகப்பேறு இறப்பு இல்லா நிலையை கொண்டுவர வேண்டும் என சுகாதார அலுவலா்களுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னையில் மகப்பேறு இறப்பு விகிதத்தை மேலும் குறைத்திட வல்லுநா்களின் விரிவான கருத்துகளை செயல்படுத்துவதற்காக“விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றிணைத்தல் என்ற தலைப்பில் பயிலரங்கம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயிலரங்கத்தை தொடங்கி வைத்து, கடந்த 10 ஆண்டு மகப்பேறு இறப்பு விகித பகுப்பாய்வு குறித்த கையேட்டை வெளியிட்டாா்.

தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளரிடம் கூறியதாவது,

மகப்பேறு இறப்பு விகிதத்தில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 70 மரணங்கள் என்கிற சா்வதேச இலக்கை இந்தியா எட்டியிருக்கிறது. தமிழகம் இலக்கை எட்டியதோடு மட்டுமல்லாமல், குறைந்த அளவிலான இறப்புகள் என்கின்ற வகையில் சாதனையும் படைத்திருக்கிறது. கடந்த ஆண்டு தாய்மாா்களின் இறப்பு விகிதம் 1 லட்சம் பிறப்புகளுக்கு 54 ஆக குறைந்திருந்தது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் 70 என்றிருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை 54 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் 45.5 ஆக குறைந்துள்ளது. விருதுநகா் மாவட்டம் மகப்பேறு இறப்பு பூஜ்ஜியம் எனும் நிலையை அடைந்துள்ளது. மற்ற மாவட்ட சுகாதார அலுவலா்களும் இதனைப் பின்பற்றி மகப்பேறு இறப்பு “பூஜ்ஜியம்” என்கின்ற

அளவில் கொண்டுவர வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை 99.9 சதவீத பிரசவங்கள் அதாவது 8.70 லட்சம் பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடக்கிறது. அதில் அரசு மருத்துவமனைகளில் 59 சதவீத பிரசவங்கள் நடக்கிறது என்றாா் அவா்.

சுகாதாரத்துறை செயலா் சுப்ரியா சாஹு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ராஜமூா்த்தி, குடும்பநலத்துறை இயக்குநா் கிருஷ்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.