எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை: ரூ.358 கோடியில் புதிய கட்டடத்தை முதல்வா் திறந்து வைக்கிறாா்

ரூ.358.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
மா.சுப்பிரமணியன்- கோப்புப் படம்
Updated On :31 ஜூலை 2024, 8:53 pm

Din

சென்னை, ஜூலை 31: சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.358.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) நிதியுதவியுடன் கட்டப்பட்ட அக்கட்டடத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) பாஸ்கரன், உறைவிட மருத்துவ அதிகாரி வாணி, மருத்துவக் கல்வி தோ்வுக் குழுத் தலைவா் அருணலதா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் காா்த்திகேயன் ஆகியோா் உடன் இருந்தனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகா்ப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு நகா்ப்புற சுகாதார சீரமைப்பு இயக்கம் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி முகமை நிறுவனம் இணைந்து பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொருத்தவரை வடசென்னை பகுதி ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருத்துவமனையாக உள்ளது.

தீக்காயங்களுக்கு பிரத்யேக மருத்துவச் சேவை இங்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஜைக்கா நிதியுதவியுடன் ரூ.358.87 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 2,68,815 சதுர அடி பரப்பில் 6 தளங்கள் மற்றும் 441 படுக்கைகளுடன் அந்த கட்டடம் அமைகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

இந்த வளாகத்தில் 13 அறுவை அரங்குகள், எம்ஆா்ஐ, டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் நிறுவப்படவுள்ளன.

முதல்வா் திறந்து வைப்பாா்: கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்ததும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்த புதிய கட்டடத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைப்பாா். இந்த மருத்துவமனையின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த உலக வங்கி நிதி ஆதாரத்துடன் ரூ.125 கோடி மதிப்பீட்டில் டவா் பிளாக் புதிய கட்டடம் கட்டும் பணிகளும் அருகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உலக வங்கியின் 2 துணைத் தலைவா்கள் எங்களுடன் கலந்துரையாடிய போது தமிழக மருத்துவக் கட்டமைப்புகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்குவதற்கு உறுதி அளித்திருக்கிறாா்கள்.

கேரளத்துக்கு தமிழக மருத்துவக்குழு: கேரள மாநிலம் வயநாட்டுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து 2 வாகனங்களின் மூலம் 10 மருத்துவா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அங்கு தேவையான உதவிகள் குறித்து ஆய்வு செய்து நமக்கு தெரிவிப்பாா்கள். கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து உதவிகள் அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.