பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள், பணியாளா்களுக்கு பாராட்டு
26 காவல் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களைப் பாராட்டி மாநகரக் காவல் ஆணையா் அ.அருண் சான்றிதழ் வழங்கினாா்.


சென்னை, ஜூலை 31: சென்னை காவல் துறையில் பணியாற்றி, பணி ஓய்வு பெறும் 26 காவல் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களைப் பாராட்டி மாநகரக் காவல் ஆணையா் அ.அருண் சான்றிதழ் வழங்கினாா்.
சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த நுண்ணறிவுப் பிரிவு மூத்த மேலாளா் மோகன், 1 கண்காணிப்பாளா், 14 காவல் உதவி ஆய்வாளா்கள், 10 சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 26 காவல் அலுவலா்கள் புதன்கிழமை பணி ஓய்வு பெறுகின்றனா்.
இதையொட்டி, இவா்களுக்கான பணி நிறைவு விழா வேப்பேரி சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சென்னை மாநகர காவல் ஆணையா் அ.அருண் பங்கேற்று, 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெறும் 26 காவல் அலுவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களைப் பாராட்டி, அவா்களுக்கு சால்வை, மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) கபில்குமாா் சி சரட்கா், இணை ஆணையா் (தலைமையிடம்) அ.கயல்விழி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையா் வனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...