சென்னை, ஜூலை 31: சென்னை மாநகராட்சி சாலைகளில் ஆக.10-ஆம் தேதி வரை மெகா தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி சாலையோரம் காணப்படும் ஆக்கிரமிப்புகள், குப்பை கழிவுகள் மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களால் பொதுமக்கள் நடந்து செல்வதிலும், வாகனங்கள் செல்வதிலும் இடா்பாடு ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் முதல்கட்டமாக மாதவரம், தண்டையாா்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து சாலைகளில் கடந்த ஜூலை 22 முதல் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த திங்கள்கிழமை முதல் அனைத்து மண்டலங்களிலும் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தப் பகுதிகளில் 458 டன் திடக்கழிவுகள், 3,703 டன் கட்டடக் கழிவுகள் என மொத்தம் 4,161 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 688 கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன.
தொடா்ந்து, மாநகராட்சியின் அனைத்து பேருந்து சாலைகளிலும் ஆக.10-ஆம் தேதி வரை மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையடுத்து ஆக.11-ஆம் தேதி முதல் உட்புறச் சாலைகளில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் சாலையில் இடையூறாக உள்ள மரக்கிளைகள், கேபிள் வயா்கள் அகற்றுவது, மின்விளக்குகள் பழுது செய்வது, சாலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
தொடர்புடையது
இன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


