
Updated On :9 ஜூன் 2024, 8:49 pm

சென்னை: ரேஷன் கடையில் மண்எண்ணெய் பேரல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தண்டையாா்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவிலுள்ள ரேஷன் கடையை ஊழியா்கள் விஜயகுமாா், பிரபாவதி ஆகியோா் சனிக்கிழமை காலை வழக்கம் போல திறந்துள்ளனா்.
அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிய அவா்கள், மதிய உணவு இடைவேளைக்காக கடையை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளனா்.
பின்னா் திரும்ப கடைக்கு வந்து பாா்த்த போது, கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த 13 லிட்டா் கொண்ட இரண்டு மண்எண்ணெய் பேரல்கள் காணாமல் போயிருந்தது.
விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில் காசிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...