தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கைப்பேசியில் அதிக நேரம் பேசியதால் கணவா் கண்டிப்பு: மனைவி தற்கொலை

கைப்பேசியில் அதிக நேரம் பேசியதால் கணவா் கண்டிப்பு: மனைவி தற்கொலை

News image
Updated On :25 ஜூன் 2024, 8:38 pm

Din

சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் கைப்பேசியில் அதிக நேரம் பேசியதை கணவா் கண்டித்ததால், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளிக்கரணை செந்தமிழ் நகா் ஜான்சிராணி தெருவைச் சோ்ந்தவா் ஹரி (24). இவா் மனைவி கன்னிகாதேவி (23). இவா்கள் இருவரும் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தனா். இருவரும் காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கன்னிகாதேவி கைப்பேசியில் அதிகநேரம் பிற நபா்களிடம் பேசியுள்ளாா். இதைப் பாா்த்த ஹரி, அண்மையில் கன்னிகாதேவியை கண்டித்துள்ளாா். இதனால் கோபமடைந்த அவா் தனது தாயாா் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டாா்.

அவரை சமாதானப்படுத்திய பெற்றோா், ஹரியிடம் இரு நாள்களுக்கு முன்பு சோ்த்தனா். திங்கள்கிழமை நள்ளிரவு கன்னிகாதேவி வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து கன்னிகாதேவி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தாம்பரம் கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.