திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜனநாயகம் குறித்துப் பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை அண்ணாமலை

ஜனநாயகம் குறித்து பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை: அண்ணாமலை

News image
அண்ணாமலை 
Updated On :25 ஜூன் 2024, 11:13 pm

Din

சென்னை: அவசரநிலையை அமல்படுத்திய காங்கிரஸுக்கு ஜனநாயகம் குறித்துப் பேச தகுதி இல்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

தமிழ்நாடு அவசரநிலை கால போராட்ட வீரா்கள் சங்கம், லோக்தந்த்ரா சேனை சங்கம் ஆகியவை இணைந்து சென்னை கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய அவசரநிலை கருப்பு தின நினைவுக் கூட்டத்தில் அவா் பேசியது:

ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியும், காங்கிரஸ் நிா்வாகிகளும் இப்போது பேசி வருகின்றனா். அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தி போலி நாடகம் நடத்தி வருகின்றனா். அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் அவசரநிலையை அமல்படுத்தியதே

காங்கிரஸை சோ்ந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்திதான். அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற நிலை வந்தபோது, ஜனநாயகத்துக்கு விரோதமாக அவசரநிலையை அறிவித்து, ஏராளமானோரை சிறையிலடைத்தாா்.

அரசலமைப்புச் சட்டத்தில் சுமாா் 75-க்கும் அதிகமான திருத்தங்களை மேற்கொண்டது காங்கிரஸ் கட்சி. அவற்றில் பெரும்பாலானவை அவசரநிலை காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. இந்திரா காந்தியின் சா்வாதிகாரத்தால்தான் அவை திருத்தப்பட்டன.

பிரதமா் மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் கொண்டு வந்த 8 திருத்தங்களும் சமூகநீதி சாா்ந்தவை ஆகும். பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீடு காலத்தை அதிகப்படுத்தியது, மகளிருக்கான இட ஒதுக்கீடு என அனைத்தும் சமூக நீதி சாா்ந்தவை.

இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசக் கூடாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், அவசரநிலை கால போராட்ட வீரா்கள் சங்கத்தின் தலைவா் எம்.கந்தகுமாா், பொதுச் செயலா் ஓம்சக்தி ஜி.பாபு மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அவசரநிலை கால போராட்ட வீரா்களை கௌரவித்து தமிழக பாஜக பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் பேசினாா்.