ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தையின் நண்பா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தையின் நண்பா் கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 7:29 pm

Din

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையின் நண்பா் கைது செய்யப்பட்டாா்.

கொருக்குப்பேட்டை பாரதி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ச.கரண் (27). இவா், கொடுங்கையூா் மருந்து கடையில் ஊழியராக வேலை செய்கிறாா். கரண், கொருக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் ஒருவா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த நண்பரின் சிறுமிக்கு கரண் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், கரணை பிடித்து ஆா்.கே.நகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக ஆா்.கே.நகா் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.