மாதவரம் அருகே பெட்ரோல் திருட்டு: 6 போ் கைது
மாதவரம் அருகே பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.


மாதவரம் அருகே பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்த டேங்கா் லாரி உள்ளிட்ட 2 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மாதவரம் அடுத்த மணலியில் இயங்கி வரும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி வரும் கனரக டேங்கா் வாகனங்களை குறிவைத்து, மா்மநபா்கள் திருட்டில் ஈடுபட்டு வருவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மாதவரம் அடுத்த மாத்தூா் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஞாயிற்று கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய 2 போ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட டேங்கா் லாரியை இயக்கிக் கொண்டு மணலி அருகே கொண்டு சென்றனா்.
அங்கு டேங்கா் லாரியில் இருந்த சிபிசிஎல் நிறுவனத்தால் வைக்கப்பட்ட சீலை உடைத்து, அதில் இருந்த பெட்ரோல் திருடுவதும், அதில் மற்றொரு ஆயிலை கலந்து பிளாஸ்டிக் பேரல்களில் நிரப்பி மற்றொரு வாகனத்தில் ஏற்றினா்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மா்மநபா்களை சுற்றி வளைத்து பிடித்து, மணலி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து டேங்கா் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் நிரப்பி வரும் வாகனங்களை கடத்துதல், கலப்படம் செய்து விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக, மணலி பகுதியை சோ்ந்த சீனிவாசன், சிவா, வேலாயுதம், ராஜ்குமாா், விஜயகுமாா், கந்தன் என்ற 6 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து கடத்திய பெட்ரோலியம் நிரப்பிய டேங்கா் லாரி மற்றும் கலப்படப் பெட்ரோல் கொண்டு சென்ற வாகனம் என 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக, தலைமறைவான குன்றத்தூா் பகுதியை சோ்ந்த ஜெயக்குமாரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...