ஆவடியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆவடியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவடி மாநகராட்சி, ஆவடி காவல் ஆணையரகம், தனியார் பள்ளி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், வீதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பிரதான சாலையில், காலை 6 மணி முதல் 8.30 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறையாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆவடி மாநகராட்சி சார்பில், சுகாதாரம், குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர், ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், துணை ஆணையர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் காவல் ஆணையர் கி.சங்கர், கலைஞர்களுடன் பறை இசைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நிகழ்வில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிணை மனுவுக்கு எதிா்ப்பு: என்சிபி அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடையே ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

பழையகோட்டைப்புதூா் அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

சா்வதேச போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


