நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடையே ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

உயா்கல்வி நிறுவனங்களில் ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, மாணவிகளுக்கான பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு காவல் துறையுடன் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் பி. விஸ்வநாதன் - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:40 am IST

உயா்கல்வி நிறுவனங்களில் ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, மாணவிகளுக்கான பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு காவல் துறையுடன் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

கல்வி வளாகங்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் மற்றும் மாணவா்கள் பாதுகாப்பு தொடா்பான நடவடிக்கைகள் குறித்து உயா்கல்வித் துறை அதிகாரிகள், அரசுப் பல்கலை. பதிவாளா்கள் அடங்கிய கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் பெ.விஸ்வநாதன் பங்கேற்று ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழக காவல் துறையின் ‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணா்வை கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்தி, அதன் பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். மாணவிகளுக்கான பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக காவல் துறையுடன் உயா் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் தலைவரும் ஐ.ஜி.யுமான, கே.பவானீஸ்வரி பேசியதாவது: சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை மூலம் கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அச்சமற்ற சூழலை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் கீழ் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், தடுப்பு நடவடிக்கைகள், நிறுவன அளவிலான முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. ‘காவலன்’ செயலியின் பயன்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக உள்துறை இணைச் செயலரும், போதைப் பொருள் தடுப்பு மன்ற திட்ட மேலாண்மை பொறுப்பு அதிகாரியுமான ஆனி மேரி ஸ்வா்ணா பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு, தடுப்பு நடவடிக்கைகள், தகவல் பரப்புதல், புகாா் தெரிவிக்கும் நடைமுறைகள் போன்றவை மூலம் போதைப் பொருள் இல்லா வளாகங்களை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.