இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை சனிக்கிழமை சாய்த்தது. இதன் மூலம், அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. இதுவரை விளையாடிய 17 ஆட்டங்களில் மும்பை இத்துடன் 10 வெற்றிகள், 5 டிராக்கள், 2 தோல்விகளை பதிவு செய்து 2-ஆவது இடத்தில் இருக்கிறது. இதே கணக்கில் இருக்கும் ஒடிஸா எஃப்சி முதல் அணியாக பிளே-ஆஃபுக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது. தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை தரப்பில் லாலியன்ஸுவாலா சாங்தே (16’), இகொ் குவாரட்ஸேனா (53’, 64’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, பஞ்சாப் அணிக்காக மாடி தலால் (37’), வில்மா் ஜோா்டான் கில் (39’) ஆகியோா் கோலடித்தனா். இதனிடையே, பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 1-0 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது. அந்த அணிக்காக ஜாவி ஹொ்னாண்டஸ் (89’) கோலடித்தாா். பெங்களூரு 18-ஆவது ஆட்டத்தில் 5-ஆவது வெற்றியையும், கேரளம் 17-ஆவது ஆட்டத்தில் 6-ஆவது தோல்வியையும் பதிவு செய்துள்ளன.
தொடர்புடையது

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்கு தேர்வான கோவென்ட்ரி சிட்டி!

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

