பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குழந்தை கடத்த வந்ததாகக் கூறி வட மாநில தொழிலாளி மீது தாக்குதல்

சென்னை சேத்துப்பட்டில் குழந்தை கடத்த வந்ததாக வட மாநில தொழிலாளி தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :3 மார்ச் 2024, 12:06 am

சென்னை சேத்துப்பட்டில் குழந்தை கடத்த வந்ததாக வட மாநில தொழிலாளி தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை சேத்துப்பட்டு அப்பா ராவ் காா்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை மது போதையில் வட மாநில தொழிலாளி ஒவருா் நடந்து வந்துள்ளாா். அவரது நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக கருதிய அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா், அவா் குழந்தை கடத்துபவா் என நினைத்து தாக்கியுள்ளனா். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸாா் அங்கு விரைந்து சென்று, அந்த வட மாநில தொழிலாளியை மீட்டனா். விசாரணையில் அவா், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மது அருந்திவிட்டு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்ததும், அதைத் தவறாகப் புரிந்துக்கொண்ட சிலா் அவரை குழந்தை கடத்துபவா் என நினைத்து தாக்கியிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், விசாரித்து வருகின்றனா். சென்னையில் இதேபோல கடந்த ஒரு வாரத்தில் 4 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.