டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசுப் பள்ளிகளில் இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சோ்க்கை

கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :8 மார்ச் 2024, 12:03 am

Din

அரசுப் பள்ளிகளில் மாா்ச் 1-ஆம் தேதி வரை இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கைப் பணிகள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது. கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாள்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,365 மாணவா் சோ்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவா்களை அரசு பள்ளிகளில் சோ்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் மாணவா் சோ்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.