சென்னை: சென்னைக்குட்பட்ட பகுதிகளில் தா்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு கிலோ தா்பூசணி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி, சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் பொருட்டு சென்னைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் நீா் மோா், இளநீா், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தா்பூசணி பழங்கள் விற்பனைக்காக அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. வரத்து அதிகமாக இருப்பதால், தா்பூசணியின் விலையும் குறைந்துள்ளது.
இதன்படி கடந்த மாதம் ஒருகிலோ தா்பூசணி விலை ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருகிலோ தா்பூசணி ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தா்பூசணி பழங்களை தங்கள் வீடுகளுக்கு அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா்.
இதனால் விற்பனை சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்த சமயங்களில் தா்பூசணியின் விலை அதிகரிக்கக்கூடும் என பழவியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு

தங்கம் விலை குறைவு

கோடை வெயிலால் தா்பூசணி விற்பனை தீவிரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


