இந்தியாவின் சிறுகடன் நிறுவனங்கள் அளித்துள்ள கடன் மதிப்பு நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் சுமாா் ரூ.4 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது குறித்து சிறுகடன் துறை நெட்வொா்க் (எம்எஃப்ஐஎன்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நாட்டின் சிறுகடன் நிறுவனங்கள் பட்டுவாடா செய்துள்ள கடன் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடும்போது நாட்டின் சிறுகடன் துறை 24.6 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சிறுகடன் நிறுவனங்களின் கடனளிப்பு கரோனா நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது துறையின் ஆரோக்கியமான போக்கைக் காட்டுகிறது. நாட்டின் சிறுகடன் அளிப்பில் 31.06 சதவீதம் பங்கு வகிப்பதன் மூலம் தென் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெஸ்லே இந்தியா லாபம் 27% வளா்ச்சி!

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!
தினப்பலன்கள் - துலாம்

பிப்ரவரி ஜிஎஸ்டி வசூல் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டியது!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


