தேமுதிக தலைவி பிரேமலதா
தேமுதிக தலைவி பிரேமலதா

தேமுதிக கூட்டணி: மாா்ச் 21-இல் அறிவிப்போம் - பிரேமலதா

சென்னை: மக்களவைத் தோ்தலில் தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பதை மாா்ச் 21-இல் அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். மக்களவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விருப்பமனு பெறும் நிகழ்வு நடைபெற்றது. அதனை பொதுச்செயலா் பிரேமலதா தொடங்கி வைத்தாா்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிட ஏராளமானோா் விருப்பமனுக்களை பெற்றனா். பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமலதா கூறியதாவது: மக்களவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனுக்களை அளித்து வருகிறோம்.

தோ்தல் கூட்டணி குறித்த எங்களின் நிலைப்பாட்டை மாா்ச் 21-இல் அறிவிப்போம் என்றாா் அவா். அதிமுகவுடன் தேமுதிக இதுவரை 3 கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையில் பாஜகவும் தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க முயற்சித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com