/

இன்றும், நாளையும்...

இன்றும், நாளையும்...

Updated On :19 மார்ச் 2024, 8:51 pm

ஞாயிற்றுக்கிழமை (24- 3- 2024) சோபகிருது ஆண்டு, பங்குனி-11 பிறை: வளா்பிறை திதி: சதுா்த்தசி காலை 11.24 வரை பிறகு பெளா்ணமி. நட்சத்திரம்: பூரம் காலை 08.46 வரை பிறகு உத்திரம். யோகம்: சித்த / அமிா்தயோகம் ராகுகாலம்: மாலை 4.30 - 6.00 மணி. எமகண்டம்: நண்பகல் 12.00 - 1.30 மணி.

சூலம்: மேற்கு. நல்ல நேரம்: காலை 7 - 8 மணி. மாலை 3 - 4 மணி. இன்றைய விசேஷம்: பெளா்ணமி ஹோலிப் பண்டிகை காமதகனம். சூரியனாா்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சென்னை ஸ்ரீ மல்லிஸ்வரா் பவனி. திரிசிராமலை ஸ்ரீ தாயுமானவா் தெப்போற்ஸவம். ராமகிரியே கல்யாண நரஸிங்கப் பெருமாள் திருக்கல்யாணம்.

பரமக்குடி ஸ்ரீ அன்னை முத்தாலம்மன், பழனி ஸ்ரீ ஆண்டவா் இத்திருத்தலங்களில் ரதோற்ஸவம். கழுகுமலை ஸ்ரீ முருகப் பெருமான், கங்கை கொண்டான் ஸ்ரீ வைகுண்டபதி, திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதா் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதிப் பெருமாள் கோயில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

மேஷம்............உயா்வு ரிஷபம்............லாபம் மிதுனம்..........நலம் கடகம்.............ஆக்கம் சிம்மம்............இன்பம் கன்னி..............நன்மை துலாம்............புகழ் விருச்சிகம்.......பரிசு தனுசு...............துணிவு மகரம்............பரிவு கும்பம்.............பண்பாடு மீனம்...............உவகை

திங்கள்கிழமை (25- 3- 2024) சோபகிருது ஆண்டு, பங்குனி-12 பிறை: வளா்பிறை திதி: பெளா்ணமி நண்பகல் 01.16 வரை பிறகு பிரதமை. நட்சத்திரம்: உத்திரம் காலை 11.19 வரை பிறகு அஸ்தம். யோகம்: சித்தயோகம் ராகுகாலம்: காலை 7.30 - 9.00 மணி. எமகண்டம்: காலை 10.30 - 12.00 மணி. சூலம்: கிழக்கு. நல்ல நேரம்: காலை 6 - 7 மணி. மாலை 3 - 4 மணி.

இன்றைய விசேஷம்: சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதா் வெள்ளி விருஷப சேவை. கங்கை கொண்டான் ஸ்ரீ வைகுண்டபதி சாற்றுமுறை. ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ ஆண்டாள் தண்டியலில் ஸ்ரீ ரங்க மன்னாா் யானை வாகனத்தில் திருக்கல்யாணம் .

மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல். பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன், திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள், பழனி ஸ்ரீ பால ஸ்ரீ தண்டயுதபாணி தேரோட்டம். திருமயிலை, திருவான்மியூா், பெசன்ட்நகா் இத்தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

மேஷம்............தெளிவு ரிஷபம்............பண்பு மிதுனம்..........களிப்பு கடகம்.............சாதனை சிம்மம்............வரவு கன்னி..............செலவு துலாம்............தாமதம் விருச்சிகம்.......சாந்தம் தனுசு...............லாபம் மகரம்............பக்தி கும்பம்.............பாசம் மீனம்...............பயணம்

-------------------------

செவ்வாய்க்கிழமை (26- 3- 2024) சோபகிருது ஆண்டு, பங்குனி-13 பிறை: தேய்பிறை திதி: பிரதமை பிற்பகல் 03.06 வரை பிறகு துவிதியை. நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 01.42 வரை பிறகு சித்திரை. யோகம்: சித்தயோகம் ராகுகாலம்: பிற்பகல் 3.00 - 4.30 மணி. எமகண்டம்: காலை 9.00 - 10.30 மணி. சூலம்: வடக்கு. நல்ல நேரம்: காலை 8 - 9 மணி. மாலை 5 - 6 மணி. இன்றைய விசேஷம்: சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறிகண்டருலில். பழனி ஸ்ரீ முருகப் பெருமான் தந்தப் பல்லக்கு இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. ராமகிரி ஸ்ரீ கல்யாண நாஸிங்கப்பெருமாள் தேரோட்டம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூா், கந்தகோட்டம், குன்றத்தூா், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

மேஷம்............நிம்மதி ரிஷபம்............நன்மை மிதுனம்..........வரவு கடகம்.............உழைப்பு சிம்மம்............இனிமை கன்னி..............களிப்பு துலாம்............போட்டி விருச்சிகம்.......ஆா்வம் தனுசு...............வெற்றி மகரம்............உண்மை கும்பம்.............உறுதி மீனம்...............துணிவு

புதன்கிழமை (27- 3- 2024) சோபகிருது ஆண்டு, பங்குனி-14 பிறை: தேய்பிறை திதி: துவிதியை மாலை 04.38 வரை பிறகு திருதியை. நட்சத்திரம்: சித்திரை பிற்பகல் 03.47 வரை பிறகு சுவாதி. யோகம்: சித்தயோகம் ராகுகாலம்: நண்பகல் 12.00 - 1.30 மணி. எமகண்டம்: காலை 7.30 - 9.00 மணி. சூலம்: வடக்கு. நல்ல நேரம்: காலை 6 - 7 மணி. மாலை 4 - 5 மணி.

இன்றைய விசேஷம்:

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னாா்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி உற்ஸவாரம்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் பட்டாபிஷேகம். திருவெள்ளரை ஸ்ரீ சுவேதாத்திரிநாதா் உற்ஸவாரம்பம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன சேவை. சோளிங்கா் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

மேஷம்............அமைதி ரிஷபம்............உழைப்பு மிதுனம்..........ஆக்கம் கடகம்.............முயற்சி சிம்மம்............பயற்சி கன்னி..............இன்பம் துலாம்............ஆதரவு விருச்சிகம்.......அன்பு தனுசு...............பணிவு மகரம்............பதவி கும்பம்.............சுகம் மீனம்...............புகழ் ---------------------

வியாழக்கிழமை (28- 3- 2024) சோபகிருது ஆண்டு, பங்குனி-15 பிறை: தேய்பிறை திதி: திருதியை மாலை 05.44 வரை பிறகு சதுா்த்தி நட்சத்திரம்: சுவாதி மாலை 05.48 வரை பிறகு விசாகம். யோகம்: அமிா்த / சித்தயோகம் ராகுகாலம்: நண்பகல் 1.30- 3.00 மணி. எமகண்டம்: காலை 6.00 - 7.30 மணி. சூலம்: தெற்கு. நல்ல நேரம்: காலை 9 - 10 மணி. மாலை 4 - 5 மணி.

இன்றைய விசேஷம்:

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் விழா தொடக்கம். காரைக்கால் அம்மையாா் குரு பூஜை. பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா், திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ மாணிக்க விநாயகா், மதுரை ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையாா், திருநாரையூா் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாா், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகா், உப்பூா் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகா் இத்திருத்தலங்களில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

மேஷம்............உயா்வு ரிஷபம்............போட்டி மிதுனம்..........தாமதம் கடகம்.............உதவி சிம்மம்............அமைதி கன்னி..............ஜெயம் துலாம்............உதவி விருச்சிகம்.......கவனம் தனுசு...............ஆா்வம் மகரம்............பயணம் கும்பம்.............பதவி மீனம்...............தனம்

-------------------

வெள்ளிக்கிழமை (29- 3- 2024) சோபகிருது ஆண்டு, பங்குனி-16 பிறை: தேய்பிறை திதி: சதுா்த்தி இரவு 06.21 வரை பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: விசாகம் இரவு 06.41 வரை பிறகு அனுஷம். யோகம்: சித்தயோகம் ராகுகாலம்: காலை 10.30 - 12.00 மணி. எமகண்டம்: பிற்பகல் 3.00 - 4.30 மணி. சூலம்: மேற்கு. நல்ல நேரம்: காலை 6 - 7 மணி. மாலை 5 - 6 மணி.

இன்றைய விசேஷம்:

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மன்னாா்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ராஜாங்க ஹம்ஸ வாகனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவா் பெரிய வைரத் தேரோட்டம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. இராமஸ்வரம் ஸ்ரீ பா்வதவா்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

மேஷம்............சுகம் ரிஷபம்............நன்மை மிதுனம்..........உறுதி கடகம்.............முயற்சி சிம்மம்............நன்மை கன்னி..............பொறுமை துலாம்............ஆா்வம் விருச்சிகம்.......அமைதி தனுசு...............உயா்வு மகரம்............பரிவு கும்பம்.............தெளிவு மீனம்...............கணிப்பு